Showing posts with label FB. Show all posts
Showing posts with label FB. Show all posts

Saturday, September 28, 2013

FACEBOOK ஐ இலவசமாக பயன்படுத்த வேண்டுமா?

இன்றைய செய்தி பேஸ்புக் பிரியர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.ஏன் என்றால் இந்த முறையில் பேஸ்புக் இற்கு சென்றால் எந்தவிதமான GPRS கட்டனங்களும் அரவிடப்படாது அல்லது நீங்கள் இணையத்தை பயன்படுத்துவதற்காக செயற்படுத்திய Data களில் எந்தவிதமான MBயும் குறையாது............அதை பற்றித்தான் இன்றைய பதிவு.








என்னைத் தொடர்பு கொண்டு  சில நண்பர்கள் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்னால் முடிந்தவரை பதில் வழங்கி வருகிறேன்.சில நண்பர்களுக்கு இன்னும் எந்தவிதமான பதிலும் கூறவே இல்லை காரணம் எங்கள் பிரதேசம் (சாய்ந்தமருது) தற்போது யாரோ கிரிஸ்மேன் (மர்ம மனிதன்) என்று சொல்லி அச்சுருத்திக்கொண்டே இருக்கிறான்.இரவில் நித்திரை இல்லை.....அதுவும் தற்போது ரமழான் மாதம் இவன் சரியாக இரவு 9.00 இற்கு பிறகுதான் வருகிறான் இரவு முழுக்க இவன் அங்க வாரானாம் இங்க வாரானாம் என்று  கேள்வி பட்டு அச்சத்திலேயே இரவு பொழுதை கடந்து கொண்டு இருக்கிறோம்.இப்படி பிரச்சினை போய் எப்படியும் சஹர் நேரம் வந்துவிடும்.

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு பிரிவினர்கள்  இது வெறும் வதந்தி  யாரும் நம்பாதீர்கள்  என்று சொல்கிறார்கள்.இது எங்கள் பிரதேசத்தில் மட்டும் அல்ல நாட்டின் பல பாகங்களில் நடந்து வருகிறது.இதை ஏன்தான் அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருக்கிறதோ.....(செய்றதே அரசாங்கம்தானே....பின்ன எப்படிப்பா....கண்டு...கொள்வாங்க....)


சரி...விடுங்க ...இது பற்றி சரியான விளக்கம் ஆதாரபூர்வமாக  கிடைத்தால் (இவன் யார்? இவன்ட நோக்கம் என்ன?)  பிறகு சொல்கிறேன்.

http://0.facebook.com  இங்கு செல்லுங்கள் (Computer & Mobile இரண்டிலும் வேலை செய்கிறது) எந்தவிதமாக கட்டனங்களும் அரவிடப்படமாட்டாது அதாவது உங்கள் கணக்கில் Rs.00.00 கிடந்தாலும் Facebook மட்டும் இந்த http://0.facebook.com முகவரி ஊடாக வேலை செய்யும்.

குறிப்பு : இதை நான் இலங்கையில் Mobitel இல் மாத்திரம் பயன்படுத்தி பார்த்தேன் வேலை செய்கிறது ஆனால் ஏனைய வலையமைப்பு மற்றும் ஏனைய நாடுகள் பற்றி தெரியாது பயன்படுத்தி வேலை செய்தால் சொல்லுங்கள்.

இனி யாருடைய FACEBOOK ACCOUNT ஐயும் HACK பன்னலாம் வாங்க!

இரண்டு நண்பர்கள் ஒரே பிரச்சினையை என்னிடம் கேட்டார்கள் ஒருவர் நேரடியாகவும் மற்றவர் மின்னஞ்சல் மூலமாகவும் கேட்டார்.

மின்னஞ்சல் மூலமாக 

"உங்களுடைய அணைத்து தகவல்களும் மிக அருமையாக உள்ளது நான் மிகவும் பிரயோசனம் அடைந்தேன். எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து கூறுங்கள் .FACEBOOK இல் யாரோ ஒருவர் என்னுடைய PHOTOS கலை வைத்து 
அசிங்கம் அசிங்கமாக EDIT செய்து அதை மற்ற நண்பர்கள் பார்க்கும் படி செய்கிறார். இதனால் எனக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது ஆகவே அந்த நபரின் FACE BOOK Acaccount ஐ HACK பண்ணும் வழிமுறைகளை தயவு செய்து எனக்கு கூறவும் .

உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன் நண்பரே !!!" 

எனக்கு  Facebook account ஐ HACK செய்வது பற்றி எதுவும் தெரியாது என்பதை  முதலில் உங்களிடம் கூறிக்கொள்கிறேன் நண்பரே!

உங்களுக்காக Google இல் தேடி பார்த்தேன் ஒரு தளம் கிடைத்தது, அவர்கள் எப்படி Facebook account ஐ Hack செய்வது என்று சொல்லி இருந்தார்கள் வீடியோ மூலம்...அப்படியே அதிர்ச்சி அடைந்து விட்டேன்....நம்மலும் மற்றவர் FB கணக்கை திருடுவோம் என்று  . ஆவலுடன் அவசர அவசரமாக அந்த தளத்தில் ஒரு கணக்கு திறந்து நண்பர்களுடைய Facebook ID ஐ கொடுத்து தேடினேன் எல்லா வேலைகளும் முடிந்தது. Password உம் கிடைத்தது encrypt   செய்த நிலையில் அதை decrypted செய்ய வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று சொன்னார்கள்...போங்கடா நீங்களும் உங்கட சேவை என்றும் உதாசீனம் செய்து விட்டு வந்தேன். காரணம் இது உண்மையா? பொய்யா? இவர்கள் பணத்துக்காக பந்தா காட்டுகிறார்களா? என்று தெரியவில்லை தள முகவரி இதோ...http://learntohackv3.com
 

பேஸ்புக்கில் உங்கள் போட்டோ ஆபாசமாக எடிட் செய்யப்பட்டு வந்தால் என்ன செய்வது?

யார் அதனை செய்தார்களோ அவர்களுக்கு ஒரு எச்சரிச்கை செய்து, அந்த போட்டவை அழித்துவிடச் சொல்லுங்கள்.அந்த நபர் உங்களுக்கு தெரியாவிட்டடால் அல்லது எச்சரிக்கை செய்தும் அந்த நபர் போட்டோவை நீக்கா விட்டால் உடனே அதனை பேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துங்கள்.எப்படி செய்வது  என்று பார்ப்போம்.குறித்த போட்டோவை திறந்து கொண்டு "Report this photo"




 அல்லது போட்டோவிற்கு நேரே இருக்கும் X என்பதை க்ளிக் செய்து
   
அந்த போட்டோ எந்த மாதிரி உள்ளடக்கத்தை கொண்டுள்ளது என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


  
எனக்கு இந்த முறை மட்டும்தான் தெரியும்....உங்களுக்கு வேறு ஏதேனும் முறை தெரியுமா?

FACEBOOK ஐ AIRTEL மூலம் இலவசமாக உபயோகிக்க

Facebook ஐ Mobitel மூலம்   இலவசமாக பயன்படுத்துவது எப்படி என்று ஏற்கனவே பார்த்தோம், அந்த முறையில் இலவசமாக பயன்படுத்த வேண்டும் என்றால் நம்முடைய போனில் குறைந்தது GPRS வசதி இருக்க வேண்டும், ஆனால் Facebook ஐ GPRS வசதி இல்லாத போனில் கூட, Airtel  ஐ பயன்படுத்தி அதுவும் முற்றிலும் இலவசமாக (SMS மூலம் ) பயன்படுத்த முடியும் ,அதை பற்றி இன்று பார்ப்போம்.






தற்போது உள்ள உங்களுடைய Password ஐ கொடுக்கவும்

 

 
 F என டைப் செய்து 32665 இற்கு ஒரு SMS   அனுப்புங்கள் (கட்டணம் அரவிடப்பட மாட்டாது)
 
உடனடியாக உங்கள் நம்பருக்கு confirmation code வரும்,  அதை 2 என்ற பெட்டியினுல் (confirmation code) கொடுக்கவும்.



உங்கள் மொபைல் நம்பர் வெற்றிகரமாக பேஸ்புக்கில் பதியப்பட்டுவிட்டது.பேஸ்புக்கில் பகிர நினைக்கும் செய்தியை டைப் செய்து 32665 இற்கு அனுப்புங்கள் (எந்த வித கட்டணமும் அரவிடப்பட மாட்டாது)



இதில் இன்னும் நிறைய வசதிகள் இருக்கிறது.....மீண்டும் ஒரு பதிவில் அது பற்றி விரிவாக பார்ப்போம்.

FACEBOOK இல் இருக்கும் உங்கள் GIRL FRIENDS இனை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க

பேஸ்புக்கில் நாம் நிறைய நண்பர்களுடன் நண்பர்களாக இருப்போம். அதில் ஒரு சிலர் நமக்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள் இன்னும் பலர் தெரியாதவர்களாக இருப்பர்கள். நமக்கு மொத்தம் எத்தனை நண்பர்கள் உண்டு, அதில் எத்தனை ஆண்கள் மற்றும் பெண்கள், பேஸ்புக்கில் உண்டு என்பதை பொதுவாக அனைவருக்கும் காட்டும் இந்த பேஸ்புக்.இதை எப்படி மறைப்பது என்று இன்று பார்ப்போம்.


01.உங்களுடைய Timeline இற்கு போய்,Friends

 02.Edit

03.இப்போது உங்கள் நண்பர்கள் பட்டியலை யார் எல்லாம் பார்க்கலாம் என்று இருக்கும்.

04.அதில் Only me என்பதை தெரிவு செய்தால், உங்களை தவிர வேறு யாருக்கும் நீங்கள் யாருடன் நண்பர்களாக இருக்கிறீர்கள் என்பதை காட்டாது (mutual friends இல்  மட்டும் காட்டும் )


வேறுநபர்கள் உங்கள் Timeline இனை பார்த்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள்...Timeline இல் View As ஐ க்ளிக் செய்து பாருங்கள்.